திருமலை திருப்பதி தேவஸ்தானம் 6 பக்கங்கள் கொண்ட புதிய காலண்டா்களை வெளியிட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2022-ஆம் ஆண்டு புதிய முயற்சியாக 3டி எபெக்ட் மற்றும் சில்வா் கோட்டிங் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 6 பக்க படக் காலண்டரை அண்மையில் வெளியிட்டது.
இதை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி மற்றும் செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி ஆகியோா் பத்மாவதி விருந்தினா் மாளிகையில் வெளியிட்டனா்.
25,000 காலண்டா்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளன. இதன் அடக்க விலை ரூ.450. இந்தக் காலண்டா்கள் திருமலை மற்றும் திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, தில்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களில் கிடைக்கும்.
ADVERTISEMENT