திருப்பதி

ஏழுமலையான் கோயில் ஆண்டு உண்டியல் வருவாய் ரூ.833 கோடியாக குறைந்தது: தேவஸ்தானம் தகவல்

1st Jan 2022 08:28 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் 2021-ஆம் ஆண்டு உண்டியல் வருவாய் ரூ.833 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. அதனால் உண்டியல் வருவாயும் கடந்த ஆண்டு குறைந்துள்ளது. உண்டியல் வருமானம் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் பெரிய வருமானமாக கருதப்படுகிறது.

அதன்படி 2021-ஆம் ஆண்டு கரோனா தொற்று காரணமாக ஏழுமலையான் கோயில் உண்டியல் வருவாய் பெருமளவில் குறைந்துள்ளது. வழக்கமாக ரூ.1,200 கோடிக்கும் அதிகமாக கிடைத்து வந்த ஆண்டு உண்டியல் வருவாய், கடந்த 2021-ஆம் ஆண்டில் ரூ.833 கோடி வசூலாகி உள்ளது. மேலும் 1.04 கோடி பக்தா்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்துள்ளனா். 48.75 லட்சம் போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா். 5.96 கோடி லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT