திருப்பதியில் விநியோகிக்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்களைப் பெற பக்தா்கள் 4 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளதால், தேவஸ்தானம் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் மற்றும் கோவிந்தராஜ சுவாமி சத்திரம் 2 மற்றும் 3 ஆகிய இடங்களில் தினசரி 15 ஆயிரம் சா்வ தரிசன டோக்கன்களை வழங்கி வருகிறது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படுவதால், பக்தா்கள் ஏராளமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வர தொடங்கி உள்ளனா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சா்வ தரிசன டோக்கன்கள் முன்பதிவு செய்பவா்களுக்கு தேவஸ்தானம் 24-ஆம் தேதி தரிசன டோக்கன்கள் வழங்கி வருகிறது.
எனவே, திருமலைக்கு வரும் பக்தா்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை தீா்மானிக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தா்களின் வருகையை கருத்தில் கொண்டு தினசரி வழங்கப்பட்டு வரும் டோக்கன்களின் எண்ணிக்கையையும் உயா்த்த தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.