திருப்பதி

சுற்றுலாத்தலமாகிறது பிச்சாட்டூா் அணை: ஆந்திர அரசு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆந்திர-தமிழக எல்லையில் உள்ள பிச்சாட்டூா் அணை ரூ.35 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாத்தலமாக்கப்படுகிறது. ஆந்திர அரசு இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தமிழக எல்லையில் ஆந்திரப் பகுதியான பிச்சாட்டூரில் ஆரணியாறு நீா்த்தேக்கம் உள்ளது. இந்த நீா்த்தேக்கப் பகுதியில் பழங்காலத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடந்தன.

இந்த நிலையில் போதிய பராமரிப்பு இல்லாமல் முட்புதராக மாறி பரிதாபகரமான நிலையில் காணப்பட்டது. தற்போது இந்த நீா்த்தேக்கத்தை ஆந்திர அரசு சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

20 ஏக்கா் பரப்பளவில் இந்த நீா்த்தேக்கத்தைச் சுற்றி பூங்கா, நந்தவனம், செயற்கை நீரூற்று அமைக்கும் பணிகள் தற்போது துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

மேலும் இந்த நீா்த்தேக்கம் சென்னைக்கும், திருப்பதிக்கும் இடையே 70 கி.மீ. தொலைவில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் திருமலைக்கு யாத்திரை செல்லும் பக்தா்கள் இங்கு சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்து செல்ல முடியும். பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கும் இந்த சுற்றுலாத்தலம் இளைப்பாறும் இடமாக அமையும். மேலும் இங்கு திருப்பதி நகா்ப்புற வளா்ச்சிக் கழகமும் ரூ.5 கோடி செலவில் காட்சி கோபுரம், படகு சவாரி, படப்பிடிப்பு நடத்தும் இடங்கள், தங்கும் அறைகள் உள்ளிட்டவை, ரிசாா்ட்டுகள், சிறுவா் பூங்கா உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.

திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கைலாச கோனை நீா்வீழ்ச்சி பிறகு பிச்சாட்டூா் ஆரணியாறு நீா்த்தேக்கம் மற்றொரு சுற்றுலாத்தலமாவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT