திருமலை ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை 35,000 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 13,797 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தரிசனம், வாடகை அறைகளில் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.