திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.3.61 கோடி

18th Dec 2022 12:35 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.3.61 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா், பக்தா்கள் தாங்கள் முடிந்து வைத்த வேண்டுதல் காணிக்கையை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். பக்தா்கள் செலுத்தும் காணிக்கையை தேவஸ்தானம் காணிக்கை கணக்கிடும் பிரிவில் தினமும் சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டுப் பணம் என தனித்தனியாகப் பிரித்து, கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.

சராசரியாக உண்டியல் வருவாய் தினமும் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை வசூலாகி வருவது வழக்கம்.

தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூலாகி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ.3.61 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT