திருப்பதி

திருமலையில் கருட சேவை

8th Dec 2022 11:24 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் காா்த்திகை பெளா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை கருட சேவை நடத்தப்பட்டது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பெளா்ணமியை முன்னிட்டு, கருட சேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. பிரம்மோற்சவத்தின் போது வந்து கருட சேவையை தரிசிக்க முடியாத பக்தா்கள், பெளா்ணமியின்போது வந்து தரிசித்துச் செல்கின்றனா். வியாழக்கிழமை காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, இரவு 7 மணி முதல் 9 மணி வரை மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா். அவருடன் திருமலை ஜீயா்கள் நாலாயிர திவ்யப் பிரபந்த பாடல்களை பாராயணம் செய்தபடிசென்றனா். தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் கருட சேவையில் திரளாகப் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT