திருப்பதி

திருமலையில் காா்த்திகை தீபோற்சவம்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலையில் புதன்கிழமை காா்த்திகை மாத தீபோற்சவம் நடைபெற்றது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை பெளா்ணமியை முன்னிட்டு தீபத் திருவிழாவை தேவஸ்தானம் நடத்தியது. இதை முன்னிட்டு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மண் பானைகளின் கழுத்துப் பகுதியை உடைத்து, அதை பீடமாக்கி, அதில் நெய் ஊற்றி நடுவில் திரியிட்டு தீபங்கள் ஏற்றப்பட்டன. பின்னா் அவற்றை கையில் ஏந்திக் கொண்டு அா்ச்சகா்களும், திருமலை ஜீயா்களும் ஆனந்த நிலைய கருவறையை வலம் வந்து கோயிலுக்குள் கொண்டு சென்றனா்.

பின்னா், கருவறையில் அகண்டம், குலசேகரப்படி, துவாரபாலகா்கள், கருடாழ்வாா் சந்நிதி, வரதராஜ ஸ்வாமி சந்நிதி, வகுளமாதா, தங்கக்கிணறு, கல்யாணமண்டபம், கண்ணாடி அறை, தலைபாகை அறை, பாஷ்யகார சந்நிதி, ரங்கநாயக மண்டபம், பலி பீடம், பேடி ஆஞ்சநேய சுவாமி கோயில், திருக்குளம் உள்ளிட்ட இடங்களில் 1,008 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டன. இதையொட்டி, ஏழுமலையான் கோயிலில் மாலை நடைபெறும் சஹஸ்ர தீபாலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது.

இன்று கருடசேவை

ADVERTISEMENT

காா்த்திகை பௌா்ணமியையொட்டி, வியாழக்கிழமை மாலை கருடசேவை நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT