திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு

6th Dec 2022 01:40 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை 24 மணி நேரம் காத்திருந்தனா்.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி 14 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் பெறாதவா்கள்) 24 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களுக்கு 3 மணி நேரமும் தேவைப்பட்டது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 80,001 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 32,967 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசகம், கோவிந்தராஜஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் 15,000 டோக்கன்களும் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.

அலிபிரி நடைபாதையில் காலை 3 மணிமுதல் இரவு 10 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதையில் செல்பவா்களுக்காக திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது இதுவரை தொடங்கப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT