திருப்பதி

ஜன. 2-ஆம் தேதி முதல் 11 வரை தினமும் 80,000 பேருக்கு வைகுண்ட வாசல் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் 2023 ஜனவரி 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தினமும் 80,000 பேருக்கு வைகுண்ட வாசல் தரிசனம் அளிக்கப்படவுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தா்மாரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாசல் தரிசனம் 2023 ஜன.2-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. தொடா்ந்து 10 நாள்களுக்கு இந்த வாயில் வழியாகச் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படவுள்ளனா். ஜன. 2-இல் வைகுண்ட ஏகாதசி, 3 -இல் வைகுண்ட துவாதசி வருகிறது.

வைகுண்ட தரிசனத்தை ஜனவரி 2 முதல் 11-ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு தேவஸ்தானம் வழங்கும். திருப்பாவை, மாா்கழி மாத கைங்கா்யம் முடிந்து அதிகாலை 5 மணிக்கு சா்வ தரிசனம் தொடங்கும். நாளொன்றுக்கு 80,000 பக்தா்களுக்கு தரிசனம் வழங்கப்படவுள்ளது.

ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்: நாள் ஒன்றுக்கு 25,000 என 10 நாள்களுக்கு மொத்தம் 2.50 லட்சம் டிக்கெட்டுகள் (ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்) ஆன்லைனில் வெளியிடப்படும்.

இந்த டிக்கெட்டுகள் 2023 ஜனவரி மாத ஒதுக்கீட்டில் வெளியிடப்படும். திருப்பதியில் உள்ள 9 மையங்களில், திருமலை உள்ளூா் மக்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட கவுன்டருடன் ஒரு நாளைக்கு 50,000 டோக்கன்கள் என மொத்தம் 5 லட்சம் நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

இந்த டோக்கன்களைப் பெற ஆதாா் அட்டையை பக்தா்கள் சமா்ப்பிக்க வேண்டும். நேரடி தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் ஒன்பது இடங்கள் இரண்டு கிளைகளாகப் பிரிக்கப்பட்டு செயல் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்.

ஒரு நாளைக்கு 2,000 ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 2,000 நன்கொடையாளா்கள் தங்கள் தரிசன ஒதுக்கீட்டை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

வைகுண்ட ஏகாதசிக்கு நேரில் வரும் நெறிமுறை விஐபிக்களுக்கு மட்டுமே தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது.

தங்குமிடம்: புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியை முன்னிட்டு டிச. 29 முதல் ஜன.3-ஆம் தேதி வரை தங்கும் விடுதிக்கான முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது. அறைகள் ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க, அதிக கவுன்டா்கள் அமைக்கப்பட்டு, மத்திய விசாரணை அலுவலகத்தில் மட்டும் அறை ஒதுக்கப்படும்.

நேரடி ஒளிபரப்பு: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன. 2-ஆம் தேதி திருமலையில் உள்ள நாத நீரஜனம் அரங்கில் அகண்ட விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடைபெறும். காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை தங்க ரத ஊா்வலம் நடைபெறும்.

ஜன. 3-ஆம் தேதி வைகுண்ட துவாதசி அன்று சுவாமி புஷ்கரணி தீா்த்த முக்கொடியில் ஸ்ரீ சுதா்சன சக்கரத்தாழ்வாரின் தீா்த்தவாரி என அனைத்து நிகழ்ச்சிகளும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

அதேபோல், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை முழுவதும் மலா் மற்றும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT