திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.3.48 கோடி

DIN

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.3.48 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் பக்தா்கள் தாங்கள் முடிந்து வைத்த வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இவ்வாறு பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம், காணிக்கை கணக்கிடும் பிரிவில் தினசரி சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டுப் பணங்கள் எனப் பிரித்துக் கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.

சராசரியாக உண்டியல் வருவாய் தினசரி ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வசூலாகி வருவது வழக்கம். தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் உண்டியல் வருவாய் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூலாகி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ.3.48 கோடி காணிக்கை கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT