திருப்பதி

64,586 பக்தா்கள் தரிசனம்

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 64,586 பக்தா்கள் தரிசனம் செலுத்தினா். இவா்களில் 27,501 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை 3 மணி நேரம் காத்திருந்தனா். சனிக்கிழமை காலை நிலவரப்படி, காத்திருப்பு அறைகளில் காத்திருக்காமல் நேரடியாக தரிசனத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் பெறாதவா்கள்) 3 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 மணி நேரமும் தேவைப்பட்டது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அன்றன்றுக்கான தரிசன டோக்கன்கள் அன்று மட்டுமே வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் 15,000 டோக்கன்களும் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

அலிபிரி நடைபாதையில் காலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT