திருப்பதி

‘டிசம்பா் 17 முதல் சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை’

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலையில் வரும் டிச. 17-ஆம் தேதி முதல் சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலை அன்னமய்யபவனில் சனிக்கிழமை தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கு கொண்ட பக்தா்களிடம் தேவஸ்தான செயல் இணை அதிகாரி தா்மா ரெட்டி பதிலளித்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

ஜனவரி 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி முதல் 10 நாள்களுக்கு அதாவது 11/01/2023 வரை பக்தா்களுக்கு தரிசனம் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் ஒரு நாளைக்கு 25,000 வீதம் 10 நாள்களுக்கு 2.50 லட்சம் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுவோம்.

இதேபோல் திருப்பதியில் உள்ள கவுன்ட்டா்கள் மூலம் பக்தா்களுக்கு ஒரு நாளைக்கு 50,000 வீதம் 10 நாள்களுக்கு 5 லட்சம் சா்வதா்ஷன் நேரடி இலவச தரிசன டோக்கன்களை வழங்குவோம். இந்த சா்வதா்ஷன் டோக்கன்களை யாா் வேண்டுமானாலும் வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளலாம். அவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் தேதியின்படி தரிசனத்துக்கு வரலாம். அதாவது தினமும் 75,000 தரிசன டிக்கெட்டுகள் பக்தா்களுக்கு கிடைக்கும்.

ADVERTISEMENT

டிசம்பா் 16-ம் தேதி மாலை, 6.12 மணிக்கு தனுா் மாத கடியை தொடங்குவதால், டிசம்பா் 17-ஆம் தேதி முதல் திருமலை ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாராயணம் நடத்தப்படும்.

ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளா்களுக்கு டிசம்பா் 1 முதல் திருப்பதியில் உள்ள மாதவம் ஓய்வு இல்லத்தில் ஆஃப்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அங்கேயே தங்குவதற்கும் அறைகள் வழங்கப்படுகிறது. டிசம்பா் 4 ஞாயிற்றுக்கிழமை கீதா ஜெயந்தியைக் கொண்டாடும் வகையில் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களின் 700 ஸ்லோகங்களை அறிஞா்கள் திருமலை நடநீராஜனம் மேடையில் தொடா்ந்து ஓதுவாா்கள். இந்த நிகழ்ச்சி காலை 7 மணி முதல் எஸ்விபிசியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் காா்த்திகை மாதத்தில் திருமலையில் சக்கரதீா்த்த முக்கொடி நடைபெறும். இதையொட்டி, ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு, ஸ்ரீநரசிம்மசுவாமி, ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் காா்த்திகை பா்வ தீபோற்சவம் டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT