திருப்பதி

தெலங்கானா ஆளுநா் வழிபாடு

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் சனிக்கிழமை வழிபட்டாா்.

திருமலை ஏழுமலையானை வழிபட சனிக்கிழமை காலை கோயில் முன்பு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் கோயில் மரியாதை அளித்து வரவேற்று அழைத்துச் சென்றனா். கொடி மரத்தை வலம் வந்து வணங்கி ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து வேதஆசீா்வாதம் செய்வித்து ஏழுமலையான் தீா்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி சேஷ வஸ்திரம் அணிவித்தனா். பின்னா், உலா் மலா்களால் தயாரிக்கப்பட்ட ஏழுமலையான் திருவுருவப் படங்களை அவருக்கு வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT