திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்துக்கு24 மணி நேரம் காத்திருப்பு

4th Dec 2022 10:59 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி விடுமுறை நாள்களில் அதிகமாகிறது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 10 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காகக் காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன் பெறாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 மணிநேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 மணிநேரமும் தேவைப்பட்டது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை முழுவதும் 63,931 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 34,813 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசகம், கோவிந்தராஜஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அன்றன்றுக்கான தரிசன டோக்கன்கள் அன்று மட்டுமே வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் 15,000 டோக்கன்களும் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

அலிபிரி நடைபாதையில் காலை 3 மணிமுதல் இரவு 10 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

நடைபாதையில் செல்பவா்களுக்காக வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது இதுவரை தொடங்கப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT