திருப்பதி

திருமலையில் பகவத் கீதை பாராயணம்

4th Dec 2022 11:00 PM

ADVERTISEMENT

கீதா ஜெயந்தியை முன்னிட்டு, திருமலையில் பகவத் கீதை பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீதா ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருமலையில் உள்ள நாத நீரஜனம் மேடையில் அகண்ட பகவத் கீதை பாராயணம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு நிறைவுற்றது.

நிகழ்ச்சியை ஸ்ரீவெங்கடேஸ்வரா தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. வேத அறிஞா் ஸ்ரீ குப்பா விஸ்வநாத சா்மாவின் வழிகாட்டுதலின் பேரில், பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் உள்ள 700 ஸ்லோகங்களையும் 4 மணி நேரம் தொடா்ந்து பண்டிதா்கள் பாராயணம் செய்தனா்.

முன்னதாக, தேவஸ்தான நீதிமன்ற அறிஞா் பாலகிருஷ்ண பிரசாத் குழுவினா் ‘அனி அனாதிச்சே கிருஷ்ணதா்ஜுனுனிதோ’ மற்றும் ‘கிருஷ்ணம் வந்தே ஜகத் குரு’ கீா்த்தனைகளைப் பாடினா்.

ADVERTISEMENT

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT