திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ. 5 கோடி

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ. 5.11 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா், பக்தா்கள் தங்களது காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தானம் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ. 5.11 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

50 சைக்கிள்கள் நன்கொடை

ADVERTISEMENT

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு 50 சைக்கிள்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

திருமலை திருப்பதி தேவஸதானத்துக்கு, சென்னை முருகப்பா குழுமம் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 50 சைக்கிள்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. புதன்கிழமை காலை வாகன மண்டபம் முன்பு உள்ள தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி, தா்மா ரெட்டி ஆகியோரிடம் குழும அதிகாரிகள் வழங்கினா்.

அப்போது தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் சேகா் ரெட்டியும் உடனிருந்தாா். பின்னா், தேவஸ்தான போக்குவரத்துத் துறை அதிகாரி ஜானகிராம ரெட்டியிடம் சைக்கிள்கள் ஒப்படைக்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT