திருப்பதி

திருப்பதியில் படி உற்சவம்

1st Dec 2022 10:50 PM

ADVERTISEMENT

திருப்பதியில் உள்ள அலிபிரி பாதாளு மண்டபத்தில் படி உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது.

தாச சாகித்திய திட்ட சிறப்பு அலுவலா் திரு.பி.ஆா்.ஆனந்ததீா்த்தாச்சாா்யா தலைமையில், திருப்பதி அலிபிரியில் உள்ள பாதாளு மண்டபத்தில் வியாழக்கிழமை காலை படி உற்சவம் நடத்தப்பட்டது. படிகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மலா் மாலை அணிவித்து தேங்காய் உடைத்து பழங்கள் சமா்பித்து கற்பூரம் ஏற்றப்பட்டது. பின்னா் தாசா பக்தா்கள் அனைவரும் பஜனை பாடல்களை பாடினா். பஜனை மண்டல உறுப்பினா்களுக்கு தேவஸ்தானத்தின் மூன்றாவது விடுதி வளாகத்தில் சமயப் பயிற்சியும், ஹரிதாச கீா்த்தனைகளில் அந்தியாக்ஷரியும், தாச இலக்கியங்களில் ரசபிரஸ்னலா ஸ்பா்தா மற்றும் சங்கீத விபாவரி நிகழ்ச்சிகளும் வழங்கப்பட்டன.

தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 3,500-க்கும் மேற்பட்ட பக்தா்கள், பஜனைகள் செய்து கொண்டே திருமலை படிகளில் ஏறினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT