திருப்பதி

திருப்பதி கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீகாமாட்சிக்கு லட்ச குங்குமாா்ச்சனை

27th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை உற்சவமூா்த்திகளுக்கு லட்சகுங்குமாா்ச்சனை நடத்தப்பட்டது.

திருப்பதியில் கபிலதீா்த்தக் கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை லட்ச குங்குமாா்ச்சனை நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலை காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு அவரை மண்டபத்தில் எழுந்தருள செய்தனா்.

அவருடன் மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவி சிலைகளையும் எழுந்தருள செய்து கலச ஸ்தாபனம் செய்து கணபதி பூஜை, கலசபூஜைகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டது.

பின்னா் குங்குமத்தால் காமாட்சி அம்மனுக்கு லட்சாா்ச்சனை செய்வித்தனா். இதில் திரளான பக்தா்களும் திரளாக, கோயில் அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT