திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 69,012 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 29,195 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
திருமலைக்குச் செல்லும் பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையைக் காண்பித்தபின் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
சனிக்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 29 அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 12 மணி நேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்படு கிறது.
பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் நடைசாத்தப்படுகிறது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.