திருப்பதி

உண்டியல் காணிக்கை வருவாய் ரூ 4.50 கோடி

22nd Aug 2022 12:16 AM

ADVERTISEMENT

 

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ4.56 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் தாங்கள் முடிந்து வைத்த வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இவ்வாறு பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் காணிக்கை கணக்கிடும் பிரிவில் தினசரி சில்லரை மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு பணங்கள் என பிரித்து கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.

சராசரியாக உண்டியல் வருவாய் தினசரி 2 முதல் 3 கோடி வரை வசூலாகி வருவது வழக்கம். தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் உண்டியல் வருவாய் ரூ3 கோடி முதல் 4 கோடி வரை வசூலாகி வருகிறது. இந்நிலையில் பக்தா்கள் சனிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ4.56 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT