திருப்பதி

ஏழுமலையானை கோயிலில் 64,400 பக்தா்கள் வழிபாடு

21st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 64,438 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 34,361 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

சனிக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 15 மணி நேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் தேவைப்பட்டது.

காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT