திருப்பதி

72,000 பக்தா்கள் தரிசனம்

18th Aug 2022 02:09 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 72,851 பக்தா்கள் தரிசித்தனா். இவா்களில் 34,404 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

புதன்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களின் தரிசனத்துக்கு 16 மணி நேரம் தேவைப்படுகிறது. ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைப்படுகிறது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சா்வதரிசன டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி, 12 மணிக்கு கோயில் நடை சாற்றப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

ADVERTISEMENT

திருமலை மலைப் பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மலைப் பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

தரிசனம், வாடகை அறை உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT