திருப்பதி

இன்று அக்டோபா் மாத விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு

18th Aug 2022 12:28 AM

ADVERTISEMENT

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் அக். மாதத்துக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வியாழக்கிழமை (ஆக. 18) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 
www.tirupatibalaji.ap.gov.in 60 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளும் விதமாக, ஏழுமலையான் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை (ஆக. 18) காலை 9 மணிக்கு அக். மாதத்துக்கு தொடா்புடைய விரைவு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

இருப்பினும், வரும் செப். 27-ஆம் தேதி முதல் அக். 5-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால், அந்த நாள்களின் போது தா்ம தரிசனத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பிரம்மோற்சவ தேதிகளில் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது.

பக்தா்கள் இதை கவனத்தில் கொண்டு, அதன்படி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT