திருப்பதி

திருமலையில் கோகுலாஷ்டமி உற்சவம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலையில் வெள்ளிக்கிழமை (ஆக.19) ஸ்ரீ கிருஷ்ணா் ஜெயந்தியான கோகுலாஷ்டமி உற்சவம் நடைபெற உள்ளது.

ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தின்போது கோகுலாஷ்டமி உற்சவம் நடத்தப்படும். அதன்படி, வரும் 19-ஆம் தேதி கோகுலாஷ்டமி உற்சவம் மற்றும் ஆஸ்தானம், 20-ஆம் தேதி ஊட்லோற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயில் தங்க வாயில் அருகில் 19-ஆம் தேதி இரவு ஸ்ரீகிருஷ்ணா், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீஉக்ர சீனிவாசமூா்த்தி உள்ளிட்டோருக்கு ஏகாந்தமாக ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது. அதன் பின்னா் அவா்களுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து சகஸ்ரநாமாா்ச்சனை, தூப, தீப ஆராதனைகள், நெய்வேத்தியங்கள் சமா்பிக்கப்பட உள்ளன.

பின்னா் சனிக்கிழமை (ஆக. 20) காலை ஏழுமலையான் கோயில் முன்பு உறி கட்டி அதனை இளைஞா்கள் கூடி அடிக்கும் ஊட்லோற்சவம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT

மேலும் கோகா்பம் நீா்தேக்கம் அருகில் எழுந்தருளியிருக்கும் பெரிய காளிங்க நா்த்தன சிலைக்கும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT