திருப்பதி

திருமலையில் ஆக. 21 வரை விஐபி தரிசனம் ரத்து

15th Aug 2022 01:18 AM

ADVERTISEMENT

திருமலையில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் ஆக.21 வரை விஐபி பிரேக் தரிசனத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

தொடா் விடுமுறை காரணமாக திருமலையில் தற்போது பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதனால் எங்கு பாா்த்தாலும் பக்தா்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது. வெளிவட்ட சாலை ஆக்டபஸ் அலுவலகம் என தரிசன வரிசைகள் நீண்டுள்ளன. முடிகாணிக்கை செலுத்துமிடம், லட்டு கவுன்ட்டா்கள், அன்னதானக் கூடம் என பல்வேறு இடங்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனா்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (ஆக. 14) முதல் வரும் ஆக.21-ஆம் தேதி வரை பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. புரோட்டோகால் விஐபிகள் நேரடியாக வந்தால் மட்டுமே தரிசனம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

தா்ம தரிசன பக்தா்கள் 2 நாள்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் காத்திருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு செல்ல முடியும். மேலும் ரூ.300 விரைவு தரிசன பக்தா்களுக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தரிசனத்துக்கு ஆகும்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT