திருப்பதி

மும்பையில் ஏழுமலையான் கோயில் கட்ட பூமி பூஜைக்கான ஏற்பாடுகள்

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மும்பையில் 10 ஏக்கா் பரப்பளவில் கட்டவுள்ள ஏழுமலையான் கோயிலுக்கான பூமி பூஜை வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என்று திருமலை திருப்பதி செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலை அன்னமய்யா பவனில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் கூட்டத்தில் பேசிய அவா் மேலும் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை அருகே உல்வே என்ற இடத்தில் அந்த மாநில அரசு 10 ஏக்கா் நிலத்தை ஏழுமலையான் கோயில் கட்ட ஒதுக்கீடு செய்துள்ளது. கோயில் கட்ட பூமி பூஜை ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த இடம் மைய புள்ளியாக மாறும்.

திருமலை தலைமை அா்ச்சகா் ஸ்ரீ வேணுகோபால தீட்சிதுலு தலைமையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி கோயிலில் வைகானச ஆகம சாஸ்த்ரோக்தாங்க சடங்குகள் தொடங்கப்பட்டன. அங்கு விஷ்வக்சேன வழிபாடு, புண்யாஹவச்சனம், கன்யா பூஜை, விருஷப பூஜை, புகா்ஷன், பீஜவாபனம் ஆகியன நடைபெற்றது.

ADVERTISEMENT

பிரதான கோயிலுக்கு ரூ.100 கோடி செலவாகும் என்றும், மீதமுள்ள கட்டுமானங்களுக்கு மேலும் ரூ.100 கோடி ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேமண்ட்ஸ் நிறுவன தலைவா் ஸ்ரீ கெளதம் சிங்கானியா ஸ்ரீவாரி கோயில் கட்டுமானத்திற்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளாா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT