திருப்பதி

திருமலையில் 74,400 பக்தா்கள் தரிசனம்

12th Aug 2022 01:11 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 74,497 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 36,244 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 16 அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 15 மணி நேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசன முன்பதிவு செய்திருந்தவா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

ADVERTISEMENT
ADVERTISEMENT