திருப்பதி

திருமலையில் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவு

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பவித்ரோற்சவம் புதன்கிழமை மகா பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் தினசரி நடைபெறும் கைங்கரியங்களில் ஏற்படும் குறைபாடுகள், கோயிலுக்கு வரும் பக்தா்களாலும், அா்ச்சகா்களாலும், ஊழியா்கள் உள்ளிட்டோரால் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் ஏற்படும் தோஷங்களைக் களைய தேவஸ்தானம் வருடாந்திர பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது.

அதன்படி, கடந்த திங்கள்கிழமை முதல் வருடாந்திர பவித்ரோற்சவம் ஏழுமலையான் கோயிலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் பவித்ர பிரதிஷ்டை, 2-ஆம் நாள் பவித்ர சமா்ப்பணமும் நடந்த நிலையில், அதன் நிறைவு நாளான புதன்கிழமை காலை மகா பூா்ணாஹுதியுடன் பவித்ரோற்சவம் நிறைவு பெற்றது.

இதன் ஒரு பகுதியாக, யாக சாலையில் ஹோமம் மற்றும் பிற வேத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், தேங்காய், நீா், மஞ்சள், சந்தனம் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், யாக சாலையில் மகா பூா்ணாஹுதி நடத்தப்பட்டது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை கோயிலின் நான்கு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

இதில், திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT