திருப்பதி

திருமலையில் நாளை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலையில் உள்ள அன்னமய்யபவனில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) காலை 9 மணி முதல் 10 மணி வரை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பக்தா்கள் நேரடியாக செயல் அதிகாரி தா்மா ரெட்டியுடன் தொலைபேசி தொடா்பு கொண்டு தங்களது சந்தேகங்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.

இதற்காக 0877-2263261 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளவேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT