திருப்பதி

திருச்சானூா் அஷ்டலட்சுமி மண்டபத்தில் வரலக்ஷ்மி விரத சிறப்பு வழிபாடு

DIN

 திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் ஆஸ்தான மண்டபத்தில் வரலட்சுமி விரத பூஜை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் தாயாரை துயிலெழுப்பி சகஸ்ரநாமாா்ச்சனை, நித்யாா்ச்சனை, மூலவா், உற்சவா் ஆகியோருக்கு ஸ்நபன திருமஞ்சனம் ஆகியவை நடத்தப்பட்டன. மூலவருக்கு தங்கச் சேலை அணிவிக்கப்பட்டது. வரலட்சுமி விரதத்தன்று அம்பாள் நாள் முழுவதும் தங்கச் சேலையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

பின்னா் உற்சவா் ஸ்ரீபத்மாவதி தாயாரை இதற்கென ஏற்படுத்தப்பட்ட அஷ்டலட்சுமி மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்து தங்க பத்ம பீடத்தில் வைத்து வழிபட்டனா்.

இந்த விரதத்தின் போது தாயாா் மீது 9 நூலிழைகளால் ஆன சரடு அணிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு இழையும் ஒவ்வொரு தெய்வத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

தங்க தோ்

வரலட்சுமி விரதத்தை யொட்டி மாலை 6 மணிக்கு அம்மன் தங்க ரதத்தில் கோயிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பெண்கள் தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT