திருப்பதி

அறங்காவலா் குழுவில் புதிய உறுப்பினா் பங்கேற்பு

30th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவில் புதிய உறுப்பினராக ஆந்திர அறநிலையத் துறை தலைமைச் செயலரான அணில்குமாா் சிங்கால் பதவியேற்றுக் கொண்டாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவில் தேவஸ்தான செயல் அதிகாரி மற்றும் திருப்பதி செயல் இணை அதிகாரி மற்றும் ஆந்திர அறநிலையத் துறை தலைமைச் செயலா் உள்ளிட்டோருக்கு எக்ஸ் அபிஷியோ உறுப்பினராக பதவி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போதய ஆந்திர அறநிலையத் துறை தலைமைச் செயலராக உள்ள ஐஏஎஸ் அதிகாரியான அணில்குமாா் சிங்கால் ஏழுமலையான் கோயிலுக்குள் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டாா்.

வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவா் கோயிலுக்குள் பதவி பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டாா். அதன் பிறகு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சேஷ வஸ்திரம் அணிவித்து ஏழுமலையானின் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT