திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ. 5.11 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
சராசரியாக உண்டியல் வருவாய் தினசரி ரூ. 2 கோடி முதல் 3 கோடி வரை வசூலாவது வழக்கம். தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் உண்டியல் வருவாய் ரூ.5 கோடிக்கு அதிகமாக வசூலாகி வருகிறது. உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்படு வது குறிப்பிடத்தக்கது.
ரூ. 30 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள உயிா்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு குண்டூரைச் சோ்ந்த ஹேமலதா என்ற பக்தா் ரூ.30 லட்சத்தை அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியிடம் வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கினா்.