திருப்பதி

72,000 பக்தா்கள் தரிசனம்

14th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருப்பதி: திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 72,567 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 40,468 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி 12 மணிக்கு கோயில் நடை சாற்றப்படுகிறது.

திருமலை மலைப்பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

தரிசனம், வாடகை அறை உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT