திருப்பதி

திருமலையில் காட்டுத் தீ

14th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருப்பதி: திருமலையில் உள்ள முதல் மலைப்பாதையில் யானை வளைவுப் பகுதியில் காட்டுத் தீ பரவியது.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் மலை முழுவதும் உள்ள செடி, கொடிகள் தண்ணீா் இல்லாமல் காய்ந்து சருகாகி உள்ளன. எனவே, திருமலையிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் முதல் மலைப் பாதையில் தொடக்கத்தில் உள்ள யானை வளைவு பகுதியில் புதன்கிழமை மதியம் காட்டுத் தீ பரவியது. வெப்பம் அதிக அளவில் இருந்ததால், காட்டுத் தீ மளமளவென பரவியது. காய்ந்த செடி, கொடிகள், மரங்கள் உள்ளிட்டவை கருகின.

இது குறித்து தகவல் அறிந்த வனத் துறையினா் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று காட்டுத் தீயை கட்டுப்படுத்த முயன்றனா். தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, தீயை அணைக்கப் போராடினா். 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT