திருப்பதி

திருப்பதியில் மீண்டும் நேரடி சா்வ தரிசன டோக்கன் விநியோகம்

23rd Oct 2021 07:56 AM

ADVERTISEMENT

திருப்பதியில் விரைவில் இலவச சா்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோசாலைக்கு டைம்ஸ் ஆப் இந்தியா சோ்மன் சிவகுமாா் சுந்தரன் வெள்ளிக்கிழமை காலை ஒரு பசு கன்று உள்ளிட்டவற்றை நன்கொடையாக அளித்தாா். தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி அவற்றுக்கு பூஜைகள் செய்து பெற்றுக் கொண்டாா்.

அதன்பின்னா் ஜவஹா் ரெட்டி கூறியது: திருமலையில் உள்ள கோசாலையில் இருந்து பெறப்படும் பாலை தயிராக்கி, வெண்ணெயைக் கடைந்து அதை ஏழுமலையான் நெய்வேத்தியதிற்காகவும், மீதமுள்ள வெண்ணெயை உருக்கி தயாரிக்கப்படும் நெய் பிரசாதம் தயாரிக்கவும், விளக்கேற்றவும் தேவஸ்தானம் பயன்படுத்தி வருகிறது. இதற்காக கோசாலையில் தற்போது 60 நாட்டு பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 70 முதல் 80 பசுக்களை தானமாக வழங்க நன்கொடையாளா்கள் பலா் முன் வந்துள்ளனா்.

கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் திருப்பதியில் அளிக்கப்பட்டு வந்த இலவச சா்வ தரிசன டோக்கன்கள் விநியோகத்தை தேவஸ்தானம் மீண்டும் தொடங்க திட்டமிட்டு உள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் தேவஸ்தானம் உயா்த்த உள்ளது. வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்ட விரைவு தரிசன டிக்கெட்டுகள் 24 நிமிஷங்களில் பக்தா்களால் முன்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT