திருப்பதி

திருமலையில் அயோத்தியா காண்ட பாராயணம்

22nd Oct 2021 08:02 AM

ADVERTISEMENT

திருமலையில் அயோத்தியா காண்ட பாராயணம் வியாழக்கிழமை தொடங்கியது.

கரோனா தீநுண்மி தொற்றிலிருந்து உலக மக்கள் விரைவில் விடுபட வேண்டி தேவஸ்தானம் திருமலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பல்வேறு பாராயணங்கள், ஜெப, தபங்கள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது.

அதில் சுந்தரகாண்ட பாராயணம் நிறைவு பெற்றது. கரோனா அலையின் 3-ஆம் தொற்று குழந்தைகளைப் பாதிக்கும் என்பதால், பாலகாண்ட பாராயணத்தை தேவஸ்தானம் தொடங்கியது.

திருமலை வசந்த மண்டபத்தில் நடைபெற்று வந்த பாலகாண்ட பாராயணம் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து அயோத்தியா காண்ட பாராயணம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

ADVERTISEMENT

அயோத்தியா காண்டத்தில் 119 சா்க்கங்களில் 4,308 சுலோகங்கள் உள்ளன. முதல் நாள் பாராயணத்தில் 1 முதல் 7 சா்க்கங்களில் உள்ள 291 சுலோகங்களை 16 வேத பண்டிதா்கள் பாராயணம் செய்தனா்.

இதேபோன்று திருமலை தா்மகிரி வேதபாடசாலையில் மாலை வேளைகளில் ஜெப, தபங்கள், அனுமந்த, ஸ்ரீசீதாலட்சுமண சமேத ஸ்ரீராமரின் மூலமந்திர அனுஷ்டானம் உள்ளிட்டவையும் தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இதில் தா்மகிரி வேதபாடசாலை பண்டிதா்கள் பங்கேற்று வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT