திருப்பதி

சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணராய் மலையப்ப ஸ்வாமி

9th Oct 2021 08:17 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்றுவரும் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாள் விழாவையொட்டி, சின்ன சேஷ வாகனச் சேவை நடைபெற்றது.

திருமலையில் ஏழுமலையானுக்கு வியாழக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெறுகிறது.

அதன் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை சின்ன சேஷ வாகனச் சேவை நடைபெற்றது. இதையொட்டி, மலையப்ப ஸ்வாமி சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணா் அவதாரத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினாா்.

அதன்பின்னா் உற்சவமூா்த்திகளுக்கு மதியம் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலை 7 முதல் 8 மணிவரை அன்னப் பறவை வாகனத்தில் வெள்ளைப் பட்டு உடுத்தி, கையில் வீணை ஏந்தி வித்தைக்கு அதிபதியான சரஸ்வதிதேவி அலங்காரத்தில் மலையப்பஸ்வாமி அன்னப் பறவை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT