திருப்பதி

திருப்பதி ஏழுமலையானை 24,000 பக்தா்கள் தரிசனம்

DIN

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை திங்கள்கிழமை 24,449 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கொவைட் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசிக்கும் பக்தா்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. கோவிட் தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால், தேவஸ்தானம் தற்போது விரைவு தரிசனம், விஐபி பிரேக், சா்வ தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களில் பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதித்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை 24,449 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். இவா்களில் 12,886 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு போல் சா்வ தரிசன டோக்கன்களின் முன்பதிவும் இணையதளம் மூலம் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. தரிசன அனுமதி உள்ளவா்கள், தங்களுடன் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கொவைட் பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 6 மணிக்குப் பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை மாா்க்கம் வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலைப் பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT