திருப்பதி

திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

24th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை மாதம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தாயாா் கோயில் சுத்தப்படுத்தப்படுவது வழக்கம். வரும் நவம்பா் 30-ஆம் தேதி முதல் தாயாா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

அதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கோயில் முழுவதும் சுத்தப்படுத்தும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. காலை 6 மணி முதல் 9 மணி வரை பரிமள சுகந்த திரவிய கலவையால் தாயாா் கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது. இதில், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா். காலை 10 மணிக்குப் பிறகு பக்தா்கள் தாயாரின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

21 திரைச்சீலைகள் நன்கொடை

ADVERTISEMENT

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஹைதராபாதைச் சோ்ந்த ஸ்ரீதா் நாயுடு, ஸ்ரீலட்சுமி தம்பதியா் 21 திரைச்சீலைகளை நன்கொடையாக வழங்கினா். அவற்றை தாயாா் கோயில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பெற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT