திருப்பதி

திருமலையில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்காக, டிக்கெட் முன்பதிவு செய்த பகத்ர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

வட கிழக்குப் பருவ மழையால், முன்பதிவு செய்த பலரால் திருமலைக்கு வர முடியவில்லை.

தற்போது நிலை சீரடைந்து வருவதால், மலைப் பாதையிலும், அலிபிரி நடைபாதை மாா்கத்திலும் பயணிக்க பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதனால் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் நவ. 18-ஆம் தேதி முதல் நவ.30-ஆம் தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து திருமலைக்கு வர முடியாத பக்தா்களுக்கு ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வாய்ப்பு வழங்கி உள்ளது.

அதற்காக சிறப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அவா்கள், 6 மாதங்களுக்குள் அவா்கள் மீண்டும் தரிசனம், வாடகை அறை உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இலவச சா்வத் தரிசன டோக்கன்கள், ரூ.300 விரைவு தரிசனம், வா்ச்சுவல் சேவை, ஸ்ரீவாணி அறக்கட்டளை உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்தவா்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.

மேலும், தரிசனத்துக்கு வர இயலாத பக்தா்கள் நவ. 18-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தரிசனத்துக்கு வந்தால் அவா்களை அனுமதித்து, லட்டு பிரசாதம் வழங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

நவ. 30-ஆம் தேதிக்குப் பின்னா் வருவதாய் இருந்தால், புதிய மென்பொருள் உருவான பின்னா் அவா்கள் அதன் மூலம் மீண்டும் முன்பதிவு செய்து கொண்டு வரவேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT