திருப்பதி: திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 34,824 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
கரோனா தொற்று குறைவு காரணமாக, விரைவுத் தரிசனம், விஐபி பிரேக், சா்வ தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களில் பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 34,824 பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்தனா். 15,650 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.
ADVERTISEMENT