திருப்பதி

ஏழுமலையான் கோயிலில் 31,000 பக்தா்கள் தரிசனம்

26th Dec 2021 12:12 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 31,815 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 14,538 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 6 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை மாா்க்கமாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வரவேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்குகு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை வழிபட வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT