திருப்பதி

திருமலையில் 39,000 பக்தா்கள் தரிசனம்

22nd Dec 2021 12:24 AM

ADVERTISEMENT

 

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை 39,267 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 17,312 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT