திருப்பதி

திருமலையில் புதுவை அமைச்சா் தரிசனம்

9th Dec 2021 12:18 AM

ADVERTISEMENT

 

திருப்பதி: திருமலையில் ஏழுமலையானை புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், ஏகேடி ஆறுமுகம் எம்எல்ஏ ஆகியோா் புதன்கிழமை தரிசனம் செய்தனா்.

இதற்காக செவ்வாய்க்கிழமை இரவு திருமலைக்கு குடும்பத்தினருடன் வந்த அவா்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளைச் செய்தனா். புதன்கிழமை தரிசனம் முடித்த அமைச்சா், எம்எல்ஏ ஆகியோருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் வேத ஆசீா்வாதம் செய்வித்து, பிரசாதம், தீா்த்தம், லட்டு, வடை உள்ளிட்டவை அளித்து சேஷ வஸ்திரம் அணிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT