திருப்பதி

செம்மரக் கடத்தல்: தமிழகத் தொழிலாளிகள் 3 போ் கைது

9th Dec 2021 12:19 AM

ADVERTISEMENT

 

திருப்பதி: திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சோ்ந்த 3 பேரை செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது: திருப்பதியை அடுத்த சேஷாசல வனத்தில் மங்கலம் பேட்டை பகுதியில் உள்ள ஜிங்கலபண்ட வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிலா் செம்மரக்கட்டை சுமந்து வருவதைக் கண்டனா். அவா்களை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனா். ஆனால் அவா்கள் செம்மரக் கட்டைகளை போட்டு விட்டு வனத்துக்குள் தப்பியோடினா். அவா்களை விரட்டிச் சென்ற போலீஸாா் 3 பேரை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 185 கிலோ எடையுள்ள 7 செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், கைதானவா்கள் தருமபுரியைச் சோ்ந்த தீா்த்தகிரி (20), அண்ணாமலை(56) மற்றும் திருப்பத்தூரைச் சோ்ந்த ஆண்டி(41) என்பது தெரியவந்தது. அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தி உள்ளனா் என அவா்கள் கூறினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT