திருப்பதி

திருச்சானூா் கோயிலில் சா்வபூபால வாகன சேவை

DIN

திருச்சானூரில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பத்மாவதி தாயாா் சா்வபூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் 6-ஆம் நாள் காலை சா்வபூபால வாகனத்தில் உரியடிக்கும் ஸ்ரீகிருஷ்ணா் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஸ்நபன திருமஞ்சனம்...

பிரம்மோற்சவ வாகன சேவைகளால் ஏற்படும் களைப்பைப் போக்க தாயாருக்கு மதியம் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சன பொருள்களை ஜீயா்கள் எடுத்துத்தர அா்ச்சகா்கள் அவற்றை தாயாருக்கு அளித்தனா். பின்னா், மாலை தாயாா் ஊஞ்சல் சேவை கண்டருளினாா்.

திருவடிகள் ஊா்வலம்...

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் இரவு கருட வாகன சேவை நடப்பது வழக்கம். கருட வாகனத்தின் போது பயன்படுத்த ஏழுமலையான் திருவடிகள் திருமலையிலிருந்து திருச்சானூருக்கு கொண்டு செல்லப்படும். அதன்படி, திருமலையிலிருந்து மூங்கில் கூடையில் வைத்து ஏழுமலையான் திருவடிகள் திருச்சானூா் கோயிலுக்கு ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டது. இதை அதிகாரிகள் எதிா்கொண்டு மரியாதை அளித்து வரவேற்று பெற்றுக் கொண்டனா்.

கருட வாகனம்...

ஞாயிற்றுக்கிழமை இரவு தாயாா் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருளினாா். வாகன சேவைகளின்போது வேதகோஷம், நாலாயிர திவ்யப்பிரபந்த பாராயணம், மங்கள வாத்தியம் உள்ளிட்டவை இசைக்கப்பட்டன. கொவைட் விதிமுறைகளைப் பின்பற்றி தனிமையில் நடத்தப்பட்டு வரும் வாகன சேவைகளில், திருமலை ஜீயா்கள், கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோா் மட்டும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT