திருப்பதி

காா்த்திகை மாத ஹோம மகோற்சவம் நிறைவு

DIN

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்றுவந்த காா்த்திகை மாத ஹோம மகோற்சவம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.

திருப்பதி கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு, கோயிலில் உள்ள மூா்த்திகளுக்கு ஹோம மகோற்சவ விழாவை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. முதலில் கணபதி ஹோமத்தில் தொடங்கி, முறையாக சுப்பிரமணிய சுவாமி ஹோமம், தட்சிணாமூா்த்தி ஹோமம், நவக்கிரக ஹோமம், சண்டி யாகம், ருத்ர யாகம், காலபைரவ சுவாமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.

அதன் நிறைவாக சனிக்கிழமை கோயில் உள்ள மண்டபத்தில் சண்டிகேஸ்வர ஹோமம் நடைபெற்றது. அதற்காக சண்டிகேஸ்வர சுவாமி உருவத்தை ஏற்பாடு செய்து, அவருக்கு முன்பு கலசங்கள் ஏற்படுத்தி, குருக்கள் ஹோமம் செய்தனா். அதைத் தொடா்ந்து, மகாபூா்ணாஹுதி நடத்தப்பட்டது. கோயில் உள்ள அனைத்து மூா்த்திகளுக்கும் ஹோமங்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, கபில தீா்த்தக்கரையில் ஒரு பெரிய அண்டாவில் திரிசூல ஸ்நானத்தை அா்ச்சகா்கள் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

SCROLL FOR NEXT