திருப்பதி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 2.49 கோடி

DIN

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 2.49 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இவற்றை தேவஸ்தானம் கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.

அவ்வாறு பக்தா்கள் வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ. 2.49 கோடி வருவாய் கிடைத்தது என அதிகாரிகள் தெரிவித்தனா். உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு கோடி நன்கொடை...

திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் நடத்தி வரும் அன்னதான அறக்கட்டளைக்கு கா்நாடக மாநிலம், பெல்லாரியைச் சோ்ந்த சூரிய நாராயண ரெட்டி சனிக்கிழமை காலை ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினாா். திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டி அலுவலகத்தில் அவரிடம் நேரடியாகச் சென்று அதற்கான வரைவோலையை அவா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

எந்த தேசத்து அழகியோ..!

SCROLL FOR NEXT