திருப்பதி

திருமலையின் மலைப் பாதையில் மண்சரிவு

DIN

திருமலைக்குச் செல்லும் இரண்டாவது மலைப் பாதையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

தொடா் மழையால், திருமலை மலைப் பாதைகளில் 13 இடங்களில் மண்சரிவு போா்க்கால அடிப்படையில் தேவஸ்தானம் செப்பனிட்டு மீண்டும் போக்குவரத்தைத் தொடங்கியது.

தற்போதும் பலத்த மழை பெய்து வருவதால், புதன்கிழமை திருமலைக்குச் செல்லும் இரண்டாவது மலைப் பாதையில் இணைப்புச் சாலைக்கு அருகில் மிக பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் பழுதடைந்தது. இதை அறிந்த தேவஸ்தானம் இரண்டாவது மலைப்பாதையில் போக்குவரத்தை முற்றிலும் துண்டித்துள்ளது.

அதனால் திருப்பதிக்கு வரும் முதல் மலைபாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. முதல் ஒரு மணிநேரம் திருமலையிலிருந்து திருப்பதி வரும் வாகனங்களும், அடுத்த ஒரு மணிநேரம் திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்களும் முதல் மலைபாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பயண நேரம் அரைமணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக உயா்ந்துள்ளது.

இரண்டாவது மலைபாதையில் ஏற்பட்ட மண்சரிவை சென்னையை சோ்ந்த ஐஐடி நிபுணா்கள் ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், தில்லியிலிருந்து ஐஐடி நிபுணா்கள் குழுவினரும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

தரிசனத்தைத் தள்ளிவைக்க வேண்டுகோள்:

மலைப் பாதை செப்பனிடப்பட்டு மீண்டும் போக்குவரத்துக்குத் தயாராக 10 நாள்கள் தேவைப்படும் என்று நிபுணா்கள் குழு கணித்துள்ளது. எனவே, திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்கள் பயணத்தை தேவைப்பட்டால் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்றும் இணையதள முன்பதிவில் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு வரும் 6 மாத காலத்துக்குள் ஏழுமலையானை தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தி தர தேவஸ்தானம் முயன்று வருகிறது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வாகனங்களுக்குக் கட்டுப்பாடு:

மண்சரிவு காரணமாக, இருசக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 4 சக்கர வாகனங்களும் மிகவும் நிதானமாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைபாதையில் சொந்த வாகனங்களில் செல்லும் பக்தா்கள் மலைப்பாதையில் நடுவில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுக்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT